Now Trending

Jagapati Babu slammed on June 3 with Vijay

Jagapati Babu slammed on June 3 with Vijay

Jagapati Babu slammed on June 3 with Vijay
விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், ‘கத்தி’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த சதீஷும் இப்படத்தில் நடிக்கிறார்.



மேலும், டேனியல் பாலாஜி, ஜெகபதி பாபு, ஸ்ரீமன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தனர்.



இந்நிலையில், இப்படத்தில் ஜெகபதி பாபு வில்லன் வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் தான் படத்தின் பிரதான வில்லனாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நாளை வரை நடைபெறவிருக்கிறது.



அதன்பிறகு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நெல்லையில் ஜுன் 3-ந் தேதி தொடங்கவிருக்கிறது. இந்த படப்பிடிப்பில் விஜய்யும், ஜெகபதி பாபுவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் படமாக்கப்படவிருக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இந்த படத்தை இந்த வருடத்தின் இறுதியில் வெளிக்கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.




Comments

comments