Now Trending

விஜய் குறித்து வெளிவந்த அதிகாரபூர்வ உண்மை தகவல்

விஜய் குறித்து வெளிவந்த அதிகாரபூர்வ உண்மை தகவல்

விஜய் குறித்து வெளிவந்த அதிகாரபூர்வ உண்மை தகவல்



இளைய தளபதி விஜய் யாருக்கு எந்த உதவி என்றாலும் முதல் ஆளாக வந்து உதவக்கூடியவர். அந்த வகையில் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முதல் ஆளாக முன்னணி நடிகர்களில் குரல் கொடுத்தவர் விஜய் தான்.

அதுமட்டுமின்றி யாருக்கும் தெரியாமல் மாணவர்களின் அறப்போராட்டத்திலும் கலந்துக்கொண்டார்.



இந்நிலையில் நேற்று லாரன்ஸ் இதுக்குறித்து ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார். அதில் பேசிய இவர் கட்சி ஆரம்பிக்கவும் ரெடி என்பது போல் கூறினார். இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

மேலும், இந்த சந்திப்பில் தன் ட்ரஸ்டிற்கு ரூ 5 லட்சம் விஜய் அண்ணா கொடுத்திருந்தார் என அவர் கூறினார். உதவி செய்வது என் இரத்ததிலேயே இருக்கிற விஷயம் என தெரிவித்தார்.



இதுநாள் வரை நடிகர் விஜய் நிறைய உதவிகள் செய்திருந்தாலும், அதை யாரும் அவருடைய பெயர் குறிப்பிட்டு இவ்வளவு உதவி செய்தார் என்று வெளிப்படையாக கூறமாட்டார்கள். காரணம், உதவி செய்யும் பொழுதே வெளியே சொல்லகூடாது என்ற அன்பு கட்டளையுடன் தான் விஜய் எந்த உதவியையும் செய்வார். இதனை பாராட்டியே, 2007-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் பல்கலைகழகம் தானாக முன்வந்து நடிகர் விஜய்-க்கு மருத்துவர் பட்டம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.




Comments

comments