Now Trending

Bairavaa : Additional Surprise Bonus For Vijay Fans

Bairavaa : Additional Surprise Bonus For Vijay Fans





Bairavaa : Additional Surprise Bonus For Vijay Fans

இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா‘ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. கிட்டத்தட்ட அனைத்து எப்.எம்களிலும் ‘பைரவா‘ பாடல் தொடர்ந்து ஒலித்து கொண்டே உள்ளது.



இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் போனஸாக இந்த படத்தில் கூடுதலாக ஒரு பாடல் இணைக்கப்பட்டுள்ளது. பிரபல பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடல் படத்தில் இணைக்கப்பட்டுள்ளதை பாடலாசிரியரும், எடிட்டரும் தங்கள் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளனர். இந்த பாடலின் டைட்டில் குறித்த விபரங்களை படக்குழுவினர் விரைவில் முறைப்படி அறிவிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ‘பைரவா‘ படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளது என்பதும் இந்த பாடல்கள் அனைத்தையும் கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார் என்பதும் தெரிந்ததே.




Comments

comments